தமிழ் வரலாற்று படத்துல தமிழ் டைட்டில் கிடையாதா? ரசிகர்கள் ஆதங்கம்

Jul 20, 2021 08:32 pm

டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்களின் நடிப்பில் வரலாற்று பின்புலத்துடன் இந்த படம் உருவாகவுள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் சூட்டிங் தற்போது புதுச்சேரியில் மீண்டும் துவங்கியுள்ளது.

தொடர்ந்து பலகட்ட படப்பிடிப்புகளை நடத்தி வரும் 2022 சம்மரில் படத்தின் முதல் பாகத்தை வெளியிட மணிரத்னம் முடிவு செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் மிகவும் பிரமாண்டமான வகையில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இந்த படம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்த டைட்டில் லுக்கில் ஆங்கிலத்தில் பிஎஸ் -1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்று பின்புலத்துடன் சோழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் இந்த படத்தில் தமிழில் டைட்டில் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உலக அளவில் ரசிகர்களை எட்டும்வகையில் படக்குழுவினர் ஆங்கிலத்தில் டைட்டிலை வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Read next: எஸ்ஜே சூர்யாவின் 53வது பிறந்தநாள்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்