கொடிய கொரோனாவால் உலகெங்கும் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி

Jul 21, 2021 06:01 am

உலகளாவிய ரீதியில் பங்குச் சந்தையின் பங்கு பரிமாற்றல் நடவடிக்கைகள் வீழ்ச்சிப் போக்கை பதிவு செய்துள்ளதாக பொருளாதார புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

கொவிட் 19 வைரஸின் திரிபடைந்த டெல்ட்டா தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து உலக பொருளாதார மீட்சியில் சரிவு ஏற்படும் என்ற எண்ணத்தில் பங்குச் சந்தையின் செயற்பாடுகள் பின்னடைவை கண்டுள்ளன.

ஜப்பான், நியுயோர்க், ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய நாடுகள் ஹொங்கொங், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆசியாவில், ஜப்பானின் நைக்கி 224 சுட்டெண் தரநிலை 1 வீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டு கடந்த ஆறு மாதங்களில் தனது குறைந்த நிலையை பதிவு செய்தது.

டெல்ட்டா தொற்றின் பரவல் காரணமாக முதலீட்டு நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தடுப்பூசி செலுத்துகை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து கொரோனா தொற்று சற்று குறைவடைந்து உலக பொருளாதாரம் சற்று முன்னேற்றம் கண்டிருந்தது.

எனினும் மீண்டும் டெல்ட்டா தொற்று நிலைமைகளை மோசமாக்கியுள்ளது.

Read next: வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!