இராணுவ முகாமில் அடுத்தடுத்து வெடி விபத்து!! 20 பேர் உயிரிழப்பு - ஆயிரக்கணக்கானோர் படுகாயம்

1 month

மத்திய ஆப்ரிக்க நாடான எக்குவடோரியல் கினி நாட்டில், இராணுவ முகாமில் அடுத்தடுத்து வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் சுமார் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்த 1000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து நிகழ்ந்த பகுதியில், கிட்டத்தட்ட அனைத்து வீடுகளுமே சேதமடைந்துள்ளன. 

4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்களை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்றும் அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

டைனமைட்டை அலட்சியமாக கையாளுவதே வெடிப்பிற்கு காரணம் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இது ஒரு ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ, இதன்போது அதிக அளவிலான வெடிமருந்துகள் வெடித்ததாக” குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் முதலில் 17 இறப்புகள் இருப்பதாக அறிவித்தது, ஆனால் பின்னர் 15 பேர் கொல்லப்பட்டதாகக் கூறிய நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் இறப்பு எண்ணிக்கை 20 என்று கூறியது.

காயமடைந்த 420 பேருக்கு  மூன்று மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

திங்கட்கிழமை நள்ளிரவில், 600 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read next: வவுனியாவில் ஒன்றிணைந்து போராட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!