கிளிநொச்சியில் பாரிய வெடிப்பு! சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியான நபர்

Dec 05, 2021 02:39 pm

கிளிநொச்சி - பரந்தன், உமையாள்புரம், சோலைநகர் பகுதியில் பழைய உலோகங்கள் சேகரிக்கும் வீட்டில் மோட்டார் ஷெல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், 15 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் உள்ள அறையொன்றில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் ஷெல்லை பிரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சிவலிங்கம் சிவராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது இளைய சகோதரரான 15 வயதுடைய பாடசாலை மாணவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read next: வவுனியாவில் இருந்து சென்ற இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம்!