IND vs SL: மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல். போட்டி நடைபெறுவதில் சிக்கல்

Jul 17, 2021 07:12 pm


கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டிக்கான வானிலை மைய ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. ஒருவழியாக இந்தியா - இலங்கை தொடர் நாளை (ஜுலை.18) தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இரு அணிகளும் தயாராக உள்ளன.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா - இலங்கை தொடர், ஜூலை 13ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி முதல் ஒருநாள் போட்டி வரும் ஜுலை 18ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் மழை பெய்ய 20 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதே நேரத்தில் 77 சதவீத ஈரப்பதம் இருக்கும். மறுபுறம், காற்றின் வேகம் மணிக்கு 24 கி.மீ. என்றும் கூறப்பட்டுள்ளது

Read next: அஜித், விஜய் பற்றி கனல் கண்ணன் வெளியிட்ட சீக்ரெட்... அதிர்ந்து போன ரசிகர்கள்