பிரித்தானியாவில் அனைவருக்கும் ஏப்ரல் மாத அளவில் கோவிட் தடுப்பு மருந்து கொடுத்து முடியும் -கசிந்த தகவல்

Nov 21, 2020 08:19 pm

ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் ஏப்ரல் மாதம் அளவில் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்ற ஆவணம் ஒன்று கசிந்துள்ளது.

தேசிய சுகாதார சேவைகளின் ஆவணம் ஒன்றே இவ்வாறு கசிந்துள்ளதுடன்          விநியோகம் பாதுகாப்பானது என்றால் ஜனவரிக்கு முதல் தடுப்பு ஊசி ஏற்ற ஆரம்பிக்க முடியம் என தேசிய சேவை சஞ்சிகை ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தடுப்பு மருந்து தேவையான இளையோருக்கும் ஏப்ரலுக்கு முதல் வழங்க முடியும் என்றும் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மருத்துவ மற்றும் சுகாதார நலன் தயாரிப்பு கட்டளைகள் நிறுவனத்தினால் அங்கீகரிக்கும்பட்சத்தில் டிசம்பரில் தடுப்பு மருந்தை பயன்படுத்த முடியும் என சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான வேகம் தருந்து தயாரிப்பு வேகத்திலேயே தங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் சரியான திசையில் பயணிப்பதாகவும் ஆனால் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டில் இரண்டு அல்லது மூன்று தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சேர் ஜோன் பெல் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் குடும்பத்தாருடன் கொண்டாட முடியும் என்ற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னரே இந்த தகவலும் வெளிவந்துள்ளது.

இதேவேளை பண்டிகைக்காலத்தில் ஒன்றுகூடுவது தொடர்பில் தகவல் வெளியிடுவது என்பது விரைவாக நிகழ்ந்துவிட்டதாகவும் பொரிஸ் ஜோன்ஸன் கட்டுப்பாடுகளை மாற்றுவதற்கான அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 22 முதல் 28 வரை பல குடும்பங்கள் முழுமையான முகக்கவசங்களுடன் ஒன்று கூட முடியும் என டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2ம் திகதி முடக்கநிலை நிறைவடைய உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை பொது மக்கள் எவ்வாறு பின்பற்றுகின்றார்கள் என்பதில் தான் மேலும் சில கட்டுப்பாடுகளை அடுத்த மாதங்களில் தளர்த்துவது தங்கியுள்ளதாக பிரதமர் எச்சரித்துள்ளார்.

இந்த கருத்து தொடர்பில் பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவிக்கவில்லை.

Read next: 78வது பிறந்தநாளை கொண்டடிய ஜோ பைடன்