புலம்பெயர்ந்தோருடன் ஐரோப்பா சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியது! 20 பேர் பலியானதாக தகவல்

Mar 20, 2022 08:06 am

துனிசியாவில் இருந்து வெள்ளிக்கிழமை சென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல் விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் சிரியர்கள், அவர்கள் மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றனர் என்று சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

வெள்ளியன்று 12 பேரின் உடலை கண்டுபிடித்த பிறகு, சனிக்கிழமையன்று எட்டு உடல்களைக் கடலோரக் காவல்படையினர் மீட்டதாக அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். குறித்த பகுதியில் இன்னும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது.

துனிசியாவும் அண்டை நாடான லிபியாவும் ஐரோப்பிய கரைகளை அடைய விரும்பும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான முக்கிய ஆரம்ப இடங்கள் ஆகும்..

ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனமான UNHCR, 2021 ஆம் ஆண்டில் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் சுமார் 1,300 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நீரில் மூழ்கி அல்லது காணாமல் போனதாகக் கூறியுள்ளது, இது உலகின் மிகக் கொடிய மற்றும் ஆபத்தான இடம்பெயர்வுப் பாதையாகும்.

2014 ஆம் ஆண்டிலிருந்து 18,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பயணத்தை மேற்கொள்ள முயன்ற போது இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளது.


Read next: ஆண்களுக்கும் அழுகைவரும்.