பிபிசி உலக செய்திச் சேவைக்கு சீனா விதித்துள்ள தடையை உடனடியாக விழக்கவேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்

2 months

பிபிசி உலக செய்திச் சேவைக்கு சீனா விதித்துள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் உடனடியாக மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

தமது தொலைக்காட்சி அலைவரிசை வலையமைப்புக்களிலிருந்து பிரித்தானியாவுக்கு சொந்தமான பிபிசி தொலைக்காட்சி சேவையை இடை நிறுத்துவதாக சீனாஅறிவித்திருந்தது.

இதேவேளை சீனாவின் நிர்வாகக் கட்டமைப்புக்குள் காணப்படும் ஹொங்கொங் தமது நாட்டில் உள்ள பிபிசி செய்திச்சேவையின் வானொலி சேவையை இடை நிறுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் அரச தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியை பிரித்தானியா மீளப்பெற்றமைக்கு பதிலளிக்கும் வகையில் சீனாவின் இந்த நடவடிக்கை அமையப்பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக சீனாவும் பிரித்தானியாவும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் முரன்பாடான கருத்துக்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக நிறுவனம் ஒன்றின் மீதான சீனாவின் தடை தொடர்பில் பல்வேறு சர்வதேச நாடுகள் தமது கண்டனங்களை தெரிவித்துவருகின்றன.

Read next: இலங்கை நாடாளுமன்றத்தில் இனி விடுதலைப்புலிகளைப் பற்றி பேச தடை!