ரஷ்ய அல்லது சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க வெனிசுலா திட்டம்

1 month

ரஷ்ய அல்லது சீன கொரோனா வைரஸ் தடுப்பூசிகளால் தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போட வெனிசுலா திட்டமிட்டுள்ளது.

இது தென் அமெரிக்க நாட்டிற்கு டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் வரக்கூடும் என வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலா மதுரோ நேற்று கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசிகள் டிசம்பர்-ஜனவரி, மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் தடுப்பூசி போடுவதை தொடங்கப் போகிறோம் என மாநில தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் போது மதுரோ கூறினார்.

வயதானவர்களுக்கும், தற்போது நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான முன்னுரிமை கிடைக்கும். ஆனால் அனைத்து வெனிசுலா மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.

மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக அக்டோபர் மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் “ஸ்பூட்னிக்-வி” கொரோனா வைரஸ் தடுப்பூசியை நாடு பெற்றது, 

மேலும் இதில் சுமார் 2,000 தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என்று அரசாங்கம் கூறியது. 

Read next: அவுஸ்திரேலியாவில் நடந்த அரிதான நிகழ்வு! மீண்டும் தொற்றிய கொரோனா