பஸ்ஸில் வந்த பயங்கரவாதிகள்! நெடுச்சாலை முடக்கம் - நீடிக்கும் பதற்றம்

2 weeks

காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் பஸ்சில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் ஜம்மு நகரை இணைக்கு ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுச்சாலையில் உள்ள நஹ்ரோடா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனைச்சாவடி பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு நெடுச்சாலை முடக்கப்பட்டது. 

பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் பஸ்சில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் பதுங்கி பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதனால். இரு தரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. 

Read next: சட்டவிரோதமாக 39 பேரைக் கொன்ற ஆஸ்திரேலிய சிறப்புப் படைகள்! வெளிவந்த உண்மைகள்