அனைவரையும் ஆச்சரியப்படவைத்த இளம் பிரித்தானிய டென்னிஸ் வீராங்கனை

Sep 08, 2021 09:58 pm

Photo Credit: EmmaRaducanu/Facebook

18 வயதான பிரித்தானிய இளம் டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகாணு இன்று நியூ யோர்க் நகரில் நடைபெற்ற யூஎஸ் ஓபன் கால் இறுதி பொட்டில் உலக அளவில் 11 வது இடத்தில் உள்ள சுவிஸ் வீராங்கனை பெலின்டா பென்சிக் என்பவரை 6-3, 6-4 என்ற புள்ளிகளை பெற்று நேரடி செட் வெற்றியை பெற்றுள்ளார்.

இந்த கால் இறுதி வெற்றியின் மூலம் இவர் உலக தரவரிசையில் 50 வது  இடத்துக்கு முன்னேறி உள்ளார் மேலும் தற்பொழுது பிரித்தானியாவின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்து உள்ளார்.

வரும் வியாழன் அரை இறுதிக்கு முன்னேற்றிய இவர் 11  வது இடத்தில உள்ள செக் நாட்டு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா அல்லது 17 வது இடத்தில உள்ள கிரீக் நாட்டு வீராங்கனை மரியா சக்காரி அவர்களை எதிர்த்து விளையாடுவார்.

தனது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் விளையாடி உலக 150 வது தரவரிசையில் இருந்த  ராடுகாணு உலகில் தரவரிசையில் 100 க்கு வெளியே இருந்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற மூன்றாவது பெண் வீராங்கனை ஆகும்.

Read next: இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூ செலுத்த அனுமதி