மொடர்னாவின் கொரோனா தடுப்பு மருந்தின் நியம நேர மீளாய்வை ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றியம்.

2 weeks

அமெரிக்க மருந்த தயாரிப்பு நிறுவனமான மொடர்னாவின் தடுப்பு மருந்தின் நிகர நேர மீளாய்வை ஆரம்பித்துள்ளதாக ஐரோப்பிய சுகாதார ஒழுங்குகள் சபை தெரிவித்துள்ளது.

போட்டி நிறுவனமான அஸ்ரஸெனெக்கா மற்றும் பைஸர் நிறுவனங்களின் தடுப்பு மருந்து மீளாய்வு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மருந்து நிறுவனத்தின் மனிதர்களுக்கான மருத்துவக் குழு மொடர்னாவின் ஆர்என்ஏ 1273 மருந்தின் பயன்பாட்டிற்கான மீளாய்வை ஆரம்பித்துள்ளது.

தயாரிப்பு பணிகள் நிறைவடைவதற்கு முன்னரும் ஒத்துழைப்பு ஆவணங்கள் கிடைப்பதற்கு முன்னரும் கொவிட் 19 மருந்;து தயாரிப்புகளுக்கான வி;ண்ணப்பிக் பயன்பாட்டு மீளாய்வு செயற்பாடானது மருந்த நிறுவனங்களை அனுமதிக்கின்றது.

ஐரோப்பாவில் தனது நியம நேர மீளாய்வுக்கு ஒக்டோபரில் வி;ண்ணப்பித்ததாக மொடர்னா குறிப்பிட்டுள்ளது.

மொடர்னாவின் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தரவுகளை நிகர நேர மதிப்பாய்வு செயற்பாட்டை சுவிட்ஸலார்ந்து ஆரம்பித்து ஒரு வாரம் கடந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரியளவான தனது கொவிட் 19 தடுப்பு மருந்து பரிசோதனையில் போதுமான இடைக்கால ஆய்வுத்தரவுகள் கிடைக்கபெற்றுள்ளதாக இம்மாத ஆரம்பத்தில் மொடர்னா குறிப்பிட்டுள்ளது.

 

Read next: தீபாவளி மற்றும் பிறந்த நாள் கொண்டாடிய 7 பேர் மரணம் 11 பேர் காயம்