4 மாதங்களில் யானைகள் 60 பேரை கொன்றுள்ளன!

சிம்பாப்வேயின் யானைகள் இந்த ஆண்டு இதுவரை 60 பேரைக் கொன்றுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித - வனவிலங்கு மோதல் பிரச்சினை மிகவும் உணர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. இந்த ஆண்டு மாத்திரம் 60 சிம்பாப்வேயர்கள் யானைகளால் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50 பேர் காயமடைந்துள்ளனர். 2021 இல், 72 பேர் உயிரிழந்துள்ளனர்.” என அந்நாட்டு அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
புபி என்ற ஒரு மாவட்டத்தில், யானைகள் வயல்களில் உள்ள அனைத்தையும் சாப்பிட்டுள்ளதோடு, இப்போது வீட்டுத் தோட்டங்களை நாடிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும், இதன் விளைவாக காயமடைந்த யானைகள் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிம்பாப்வேயில் 100,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Read next: சந்தானத்தின் குலுகுலு பட கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் இதோ!