சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் - 8 பேர் பலி

Nov 21, 2020 01:00 pm

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள கிரீன் சோன் பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

மொத்தம் 23 ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதில் பல நாடுகளின் தூதரக கட்டிடங்களின் சுற்றுசுவர்கள் இடிந்து சிதைவடைந்தது.

இந்த ராக்கெட் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

மேலும், குடியிருப்பு பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்தன. இதனால், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த கோர தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் தான் காரணம் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் குற்றச்சாட்டிற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தோஹா நடந்துவரும் தலிபான் - ஆப்கான் அரசு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். 

இந்த பயணத்தின்போது தலிபான் அமைப்பின் பேச்சுவார்த்தைகுழு ஒருங்கிணைப்பாளரை பாம்பியோ சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Read next: ஜெர்மனியில் கோவிட் நிலைமை மோசமடைந்து வருகிறது; தொற்றுகள் 23648 ஆல் அதிகரிப்பு