ஆர்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Sep 13, 2021 08:41 am

ஆர்ஜென்டீனாவின் சால்டா நகருக்கு அருகே 6.0 ரிச்டெர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவின் சான் சால்வடார் டி ஜுஜுய் நகருக்கு மேற்கே சுமார் 173 கிலோமீட்டர் தொலைவில் 200 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் உண்டான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


Read next: தொற்றை குறைக்கும் கடும் பிரயத்தனத்தில் நியூஸிலாந்து