கொலையாளி பொலிஸுக்கு 12 வருடங்களின் பின்னர் மரண தண்டனை

2010ஆம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ப்ளோரிபர்ட் செபேயா கொல்லப்பட்ட வழக்கில் கொங்கோ இராணுவ நீதிமன்றம் உயர் பொலிஸ் அதிகாரிக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
பொலிஸ் அதிகாரி கிறிஸ்டியன் என்கோய் கெங்கா கெங்கா, கொலை, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
செபேயாவின் உடல் கின்ஷாசாவில் அவரது காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கொங்கோவில் மரண தண்டனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும இராணுவ நீதிமன்றங்கள் தொடர்ந்து அத்தகைய தண்டனைகளை வழங்குகின்றன.
மற்றொரு பொலிஸ் அதிகாரியான ஜெக் மிகாபோவுக்கும் விசாரணையின் போது 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் செபேயாவையும் அவரது சாரதி பிடல் பசானாவையும் கழுத்தை நெரித்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்த பொலிஸ் அதிகாரி போல் மவிலாம்ப்வே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read next: 4,000 புதிய குடியேற்ற வீடுகளுக்கு ஒப்புதல் அளித்த இஸ்ரேல்