அதிகம் தண்ணீரை அருந்துகிறீர்களா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Dec 07, 2022 03:24 am

மக்கள் உண்மையில் அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்தும் பழக்கத்தை வைத்திருக்கலாம் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அன்றாடம் 8 குவளை அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது என்பது தேவைக்கு அதிகமாக இருக்கலாம் என்று ஸ்காட்லந்தின் University of Aberdeen பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.

பிறந்து 8 நாளே ஆன குழந்தை முதல் 96 வயது முதியவர் வரை 5,600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆய்வின் முடிவுகள் Science சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

Eight

மனிதர்கள் உட்கொள்ளவேண்டிய தண்ணீரில் பாதி உணவிலிருந்து வருவதால் அன்றாடம் 1.5 லிட்டரிலிருந்து 1.8 லிட்டர் வரை தண்ணீர் குடித்தால் போதும் என்று கூறப்பட்டது.

2 லிட்டர் தண்ணீர் குறித்த கணிப்பு முன்னர் உணவிலிருந்து கிடைக்கும் நீரின் அளவைத் துல்லியமாகக் கணக்கில் கொள்ளவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

அளவுக்கு அதிகமான தண்ணீரைக் குடிப்பதால் பொருளியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

Study

பிரித்தானியாவை பொறுத்தவரை 40 மில்லியன் பெரியவர்கள் அன்றாடம் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை அநாவசியமாக அருந்துவதாகக் கருதப்படுகிறது.

தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவக்கூடிய அந்த 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் சிறுநீராக வீணாகச் செல்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டினர்.

Who


 

Read next: என்னால் கேக் சாப்பிட முடியாது - கவலையில் பசில் ராஜபக்ஷ