ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களுக்கு ஏமாற்றம்!

Nov 23, 2022 12:18 am

ஆஸ்திரேலியாவில், பெரும்பாலான மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா – பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளின் விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

அந்த விண்ணப்பதாரர்கள் உண்மையில் படிக்க வருகின்றார்களா என்பது தற்போதுள்ள சிக்கல்களின் காரணமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

இந்த நாடுகளில் இருந்து பெறப்பட்ட மாணவர் வீசா விண்ணப்பங்களில் 25 வீதமானவையே இவ்வருடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெற்காசிய நாடுகளின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு சிலர் ஏதேனும் விசாவைப் பெற முயற்சிப்பதாக உள்விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த நாடுகளில் இருந்து தொழிற்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாகவும், இடைநிலைக் கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக புள்ளி விவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Read next: கொழும்பில் பாடசாலை சீருடையில் மாணவர்கள் செய்த அதிர்ச்சி செயல்