வானில் மாயமாகும் நட்சத்திரங்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்

Jan 22, 2023 06:07 am

உலகம் முழுவதம் வானில் உள்ள நட்சத்திரங்கள் மாயமாகுவதனை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் அதிகரிக்கும் செயற்கை விளக்குகளால் மனிதர்களின் கண்களால் நட்சத்திரங்களைக் காண்பது கடினமாவதாக ஆய்வொன்று காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் கண்களால் நேரடியாகப் பார்க்கக்கூடிய நட்சத்திரங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்திருப்பதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு ஜெர்மானியப் புவியியல் ஆய்வு நிலையம் அந்த ஆய்வை நடத்தியது.

நட்சத்திரங்கள் குறித்து விஞ்ஞானிகள், நட்சத்திர நிபுணர்கள் ஒப்படைத்த 50,000க்கும் மேற்பட்ட தகவல்களைத் திரட்டிய அந்த ஆய்வு அதன் முடிவுகளை science.org தளத்தில் வெளியிட்டது.

இரவு வானின் ஆக மங்கலான நட்சத்திரங்கள் மெதுமெதுவாக மறைவது கவனிக்கப்பட்டது. 

மேலும் செயற்கை விளக்குகளின் வெளிச்சம் ஆண்டுக்கு 10 விழுக்காடு அதிகரிப்பதாக ஆய்வு வெளியிட்டது.

செயற்கை விளக்குகளின் வெளிச்சம் அதிகரித்துக்கொண்டே போகும்போது வானில் நட்சத்திரங்களைக் காண்பது இன்னும் கடினமாகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Read next: இலவச மருத்துவ முகாம்