சிவகார்த்திகேயனின் டான் படத்தினை பாராட்டிய இயக்குனர் அட்லீ !

May 13, 2022 06:49 pm

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடித்த டான் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ப்ரியங்கா மோகன்,எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,பாலசரவணன்,மிர்ச்சி விஜய்,சிவாங்கி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த படத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் அட்லீ இந்த படத்தினை பார்த்து சிவகார்த்திகேயன்,இயக்குனர் சிபி மற்றும் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சிபி அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குருவிடம் வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியை சிபி நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் ஆக பதிவிட்டுள்ளார்.


Read next: பத்திரிக்கையாளரின் இறுதி ஊர்வலத்தில் துக்கத்தில் இருந்தவர்களை தாக்கிய இஸ்ரேலிய போலீசார்