திண்டுக்கல் ஐ.லியோனி பாடநூல் கழக தலைவராக நியமிப்பு !

Jul 22, 2021 05:54 am

பட்டிமன்ற மேடைகளிலும், டி.வி. பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும், அரசியல் மேடைகளிலும் என்னை தொடர்ந்து பார்க்கலாம் என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும் கூட என்னுடைய கலைப் பயணம் தொடரும் பட்டிமன்றத்தில் மீண்டும் சந்திக்கலாம் என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்வழி பாடநூல் அச்சிடும் பணி தொடங்க உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட பாட புத்தகங்கள் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்

புதிதாக பொறுப்பேற்ற திமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த ஐ லியோனி தமிழக முதல்வர் என்னை பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்ததிலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன் திருவள்ளூர் கிடங்கிலிருந்து 860 பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது இதுவரை 400 பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களை தமிழ் வழியில் அச்சிடும் பணியை தமிழக முதல்வர் எனக்கு கொடுத்துள்ளார் அதன்படி விரைவில் உயர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது பாடநூல் கழக அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.

மேலும், பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும் கூட என்னுடைய கலைப் பயணம் தொடரும் எனவும் பட்டிமன்ற மேடைகளிலும், டி.வி. பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும், அரசியல் மேடைகளிலும் என்னை தொடர்ந்து பார்க்கலாம் என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Read next: முன்னெப்போதும் இல்லாத வகையில் தென் கொரியாவில் ஆபத்து அதிகரிப்பு