சிம்லாவில் ஜாலி டூர்... தோனியின் மனைவி மற்றும் மகளின் வைரல் புகைப்படங்கள்!

Jun 25, 2021 09:15 pm

சிம்லா: சிஎஸ்கே கேப்டன் தோனி, சிம்லாவில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் நேரம் செலவிட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது. இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மே.4ம் தேதியுடன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் அனைத்து அணி வீரர்களும் அடுத்த தொடர்களுக்காக சென்றுவிட்டனர்.


இந்திய வீரர்கள் இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களுக்காக சென்றுவிட்டாலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற ஆவர் ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் தோனி ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் ஜாலி டூர் சென்றுள்ளார். சிம்லாவுக்கு தற்போது வருகை தருவதற்கு கோவிட் பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியை சிம்லாவில் கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


தோனி, சிம்லாவில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதனை சாக்‌ஷி தோனி மற்றும் ஜீவா தோனி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். குளிர் பிரதேசத்தில் தோனி தனது மகளுடன் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்டுள்ள அழகான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் தோனியின் பழைய அதிரடியை ரசிகர்கள் மிஸ் செய்தனர். ஆனால் அவரின் சிறப்பான கேப்டன்சியால் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. வரும் செப்டம்பரில் தொடங்கவிருக்கும் ஐபிஎல்-ன் 2ம் பகுதியில் தோனியின் பழைய ஃபார்மை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read next: பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு மருந்து தொடர்பான தரவுகள்