இலங்கையில் “டெல்டா” குண்டு வெடித்துள்ளது

Aug 10, 2021 02:19 pm

இலங்கையில் “டெல்டா வெடிகுண்டு வெடித்துள்ளது” என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், எனவே அடுத்த சில வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா பரவுவது இந்தியாவில் முன்பு இருந்த நிலைக்கு ஒத்ததாக இருந்ததாகவும், இப்போது நிலைமை தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

அடுத்த 2-3 வாரங்கள் நாட்டுக்கு முக்கியமானவை. குறிப்பாக டெல்டா வைரஸ் ஒரு வெடிகுண்டு போன்றது.

இது நியூயோர்க் நகரில் வெடித்தது, லண்டனில் வெடித்தது, இந்தியாவில் வெடித்தது, இந்தோனேசியாவில் வெடித்தது, இப்போது இலங்கையிலும் டெல்டா வெடிகுண்டு வெடித்துள்ளது என்பதை நாம் ஏற்க வேண்டும். 

ஆனால் நாம் இதை சரியாக எதிர்கொள்ள வேண்டும். எதிர்வரும் 2-3 வாரங்களில் நாம் அனைவரும் கவனமாக மற்றும் பாதுகாப்பாக இருந்தால், இந்த சவாலை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறோம்.

மேலும், கொழும்பு வடக்கில் உள்ள ராகம போதனா மருத்துவமனையின் நிலை, சமீபத்தில் சீர்குலைந்த நிலையில் இருந்தது.

எனினும், செவிலியர்களின் தியாகம் மற்றும் அரசியல் அதிகாரிகளின் உதவியுடன், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, உடல்கள் அகற்றப்பட்டு தகனம் செய்யப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Read next: மேலும் இலக்கில் முன்னேறுகின்றது தலிபான்