21ம் திகதி பாடசாலைகள் திறக்க ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு - மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்!

Oct 19, 2021 12:00 pm

21ம் திகதி பாடசாலைகள் திறக்க ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read next: ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மீலாதுன் நபி தின வாழ்த்து தெரிவிப்பு!