வெனிசுலாவில் பேரனர்த்தம்! 20 பேர் பலி - பலர் மாயம்

Aug 27, 2021 05:43 am

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மரிடா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 17 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் மாயமாகியுள்ளனர்.

இதையடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், இந்த கனமழை காரணமாக மாகாணத்தின் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மரிடா மாகாணத்தில் இதுவரை 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நகரின் பல்வேறு இடங்களில் சாலை, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Read next: ஊரடங்கு ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது