ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வெள்ளத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு

Jul 17, 2021 09:38 pm

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக மேற்கு ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 170 ஆக உயர்ந்துள்ளது. பல பகுதிகள் இன்றுவரை தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளாக இருந்து வருகிறது, மேலும் தொடர்பு சாதனங்கள் இப்பொழுதும் துண்டிக்கப்படு உள்ளது.

43 பேர் பலியாகிய வட ரைன் வெஸ்டபாலிய பகுத்திக்கு ஜேர்மன் நாட்டின் ஏனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்னமியர் இன்று விஜயம் செய்து இருந்தார். ஜெர்மனியில் பல பகுதிகளில் நீத்தேக்கங்கள் உடையும் தருவாயில் இறந்ததால் பல ஆயிரம் பேர் ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

பெல்ஜியத்தில் இதுவரை 27 பேர் பலியாகி உள்ளார்கள்.

103 பேரை இதுவரை காணவில்லை அல்லது அவர்களை இதுவரை நெருங்க முடியவில்லை அல்லது அடையாளம் நாணப்படாமல் மருத்துவமனையில் இருக்கலாம் என்று என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

 

Read next: இன்றைய வானிலை அறிக்கை !