லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற மருத்துவர் திடீர் மரணம்! கொரோனா காரணமா?

Jul 18, 2021 07:55 am

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற மருத்துவர் ஒருவர் மாரடைப்புக் காரணமாக வீட்டில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த மருது்துவ பரிசோதித்து பார்த்தபோது, அவருக்கு  கொவிட் - 19 நோய்த்தொற்று உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (வயது-80) என்ற மருத்துவரே ஸஉயிரிழந்துள்ளார். 

இவர் அச்சுவேலி வைத்தியசாலை முன்னாள் அத்தியட்சகர் என்று உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

லண்டனிலிருந்து கடந்த ஜூன் 29 ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய அவர் நேற்றுமுன்தினம் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டடு, சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக நேற்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனால் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் அவரின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவுள்ளது.

அவர் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் லண்டனில் பைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதற்கான அட்டையை வைத்திருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read next: கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான பிரசாரம்!முகநூல் நிறுவனம் மீது அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டு!