பூமியை நோக்கி வரும் ஆபத்து - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட நாசா

Mar 10, 2023 02:07 am

2046 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் திகதி பூமிக்கு புதிய ஆபத்து ஒன்றிருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது. 

அந்த ஆய்வுகளின் படி இன்னும் 23 ஆண்டுகள் கழித்து காதலர் தினத்தன்று நம் பூமியின் மீது சிறு கோள் ஒன்று மோதவுள்ளதாக  நாசா தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின்படி 2023 டி டபிள்யூ என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய கோளை ஆய்வு செய்து வரும் நாசா அந்தக் கோள் 2046 ஆம் ஆண்டு பூமியை தாக்கும் அபாயமிருப்பதாக தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த சிறிய கோளின் நகரும் கல்லை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அறிவித்திருக்கிறது.

மேலும், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நாசா அந்தக் கோள் பூமியை தாக்குவதற்கான அபாயம் குறைந்த அளவில்தான் இருப்பதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து தெளிவாக செய்தியை குறிப்பிட்டுள்ள நாசா புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் போது அவற்றின் நிச்சயமற்ற தன்மையை குறைப்பதற்கும் எதிர்காலத்தில் அவற்றின் சுற்றுப்பாதைகளை போதுமான அளவில் கண்காணிப்பதற்கும் நிறைய தரவுகள் தேவைப்படுவதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறது.

Read next: இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவித்தல்!