ஜெர்மனிக்கு காத்திருக்கும் ஆபத்து - வெளியான முக்கிய தகவல்

Sep 12, 2022 05:11 pm

ஜெர்மனியில் வாட்டி வதைத்துவரும் அதீத வெப்பநிலை காரணமாக  அடுத்த 15 ஆண்டுகளில்  பனிப்பாறைகள்  உருகி காணாமல் போய்விடும் என்று  ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுகள் உள்ளிட்ட நாடுகளில்  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.  வெப்பக்காற்றை தாங்க முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.  

அத்துடன் ஜெர்மனியில் மழையளவும் குறைந்துள்ளதால்,  அங்கு நீண்டு செல்லும் ஆல்பஸ் பனிமலை தொடர்களில் உள்ள முக்கிய 5 பனிப்பாறைகளின் எதிர்காலம் மிக மோசமாக உள்ளதாக  கூறுகின்றனர்.  நியூனிக் நகரில் உள்ள பெவேரியன் அகாடமி ஆப் சயின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து அறிவித்துள்ளனர்.  

ஆல்பஸ் மலை தொடர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளதாகவும்,  அவற்றில் பெரும்பாலான பனி பாறைகள், அடுத்த 15 ஆண்டுகளுக்குள்ளாக இருந்த இடம் தெரியாதவாறு காணாமல் போகக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். 

ஜெர்மனியின் மிக உயர்ந்த மலையான ஜெர்பிக்சன் உச்சியில் அமைந்துள்ள முக்கிய பனிப்பாறையானது  கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேகமாக உருகி வருவதாகவும், பனியின் அடர்த்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  

இந்த ஆண்டு ஐரோப்பா  நிலவிய அதீத வெப்ப அலை மற்றும் குறைந்த மழைபொழிவின் காரணமாகவே பனிப்பாறைகள் உருகும் வேகம் வெகுவாக அதிகரித்திருப்பதாகவும்,   பனிப்பாறையின் மேற்பரப்பில் சஹாரா பாலைவனத்தில் இருந்து வீசிய புழுதி புயலால் படிந்த தூசியே முக்கிய காரணம் என்றும் தெரிவித்தனர்.


Read next: அர்ஜென்டினாவின் பச்சை ஹைட்ரஜன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்வலர்கள்