அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

Sep 08, 2022 07:59 am

உக்ரேனின் Zaporizhzhia அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்து நேர்ந்தால் அது உக்ரேனின் அண்டை நாடுகளையும் பாதிக்கும் என்று உக்ரேனிய அணுச்சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸப்போரிஸியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் சென்ற மார்ச் மாதம் கைப்பற்றின. அண்மை வாரங்களில் அங்குத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அந்தத் தாக்குதல்களுக்கு உக்ரேனும் ரஷ்யாவும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. அணுவாலை தற்போது அதன் உட்புற மின்சார விநியோகங்களில் இயங்கி வருகின்றது.

அதன் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மின்சாரம் வழங்க டீசலைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். ஆனால் போர்க்காலத்தில் டீசல் கிடைப்பது சிரமம் என்று அணுச்சக்தி அமைப்பின் தலைவர் கூறினார்.

டீசல் தீர்ந்துபோனால் அணுவாலையில் விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு வெளியாகும் ஆபத்து ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். மொல்டோவா, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலந்து, பெலரூஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உக்ரேனின் எல்லையில் உள்ளன.


Read next: 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.