மலாவியை தாக்கிய பிரெட்டி புயல் : பலி எண்ணிக்கை 326 ஆக உயர்வு!

Mar 18, 2023 10:29 am

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி பிரெட்டி புயல் தாக்கத்தினால் கடும் அழிவுகளை சந்தித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு மலைக்கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. 

இதில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. மலாவி நாட்டை உலுக்கிய புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்து உள்ளது. 


 


Read next: குற்றச்சாட்டுகள் உள்ளவரை IGPயாக நியமிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்