சிட்னியில் ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு !

Jul 14, 2021 09:18 am

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.

மூன்று வாரம் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கொரோனா தொற்றின் புதிய கொத்தணிகளை தடுக்கத் தவறியுள்ளது.

உள்நாட்டில் புதிதாக 97 நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் குறைந்தது ஜூலை 30 வரை கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் மனக்கசப்பை தந்தாலும் முடக்கத்தை இன்னும் இரண்டு வாரங்களாவது நீட்டிக்க வேண்டும் என அவர் கூறினார்.

டெல்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்ட 97 புதிய நோயாளிகளில் 24 பேர் சமூக பரவல் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

டெல்டா மாறுபாட்டின் இந்த எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read next: சீன ஹோட்டல் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு