ஆர்ஜெண்டினா துணை அதிபரான கிறிஸ்டினா பெர்னாண்டோஸை சுட்டுக்கொல்ல முயற்சித்த நபரின் காதலி கைது

Sep 06, 2022 01:37 am

தென் அமெரிக்க நாடுகளில் அர்ஜெண்டினாவும் ஒன்று. அந்நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டோஸ் டி கிரிச்னர். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ஊழல் வழக்கு தொடர்பான கடந்த வியாழக்கிழமை கிறிஸ்டினா கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார்.

அதன் பின் புவெனோஸ் அய்ரோஸ் நகரில் உள்ள் அதனது வீட்டிற்கு கிறிஸ்டினா வந்தார். அப்போது, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கிறிஸ்டினாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அப்போது, அந்த கூட்டத்திற்குள் திடீரென புகுந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கிறிஸ்டினாவை சுட்டுக்கொல்ல முயற்சித்தார். 

ஆனால், அதிர்ஷ்டவசமாக கிறிஸ்டினா இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார். துப்பாக்கியில் குண்டு இருந்தபோதும் அதிர்ஷ்டவசமாக தாக்குதல் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் கிறிஸ்டினா மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்த நபரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபர் பிரேசிலை சேர்ந்த சபக் மொண்டியல் (வயது 35) என்பதும் அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அர்ஜெண்டினாவில் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. சபக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், துணை அதிபர் கிறிஸ்டினாவை சுட்டுக்கொல்ல முயற்சித்த சபக் மொண்டியலின் காதலி பிரண்டா உலியர்டி (வயது 23) என்ற பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். 

கிறிஸ்டினாவை கொலை செய்ய முயற்சித்த சபக்கிற்கு அவரது காதலில் பிரண்டா உதவினாரா? இந்த கொலை முயற்சியில் அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Read next: கனடாவில் 10 பேரை கொடூரமாக குத்திக்கொன்ற சம்பவம்!! சந்தேநகர் சடலமாக மீட்பு