தொடர்ச்சியாக 25 டாட் பந்துகள்.. அசராத இந்திய வீரர்கள்... நியூசி சிறப்பான பௌலிங்

Jun 19, 2021 08:07 pm

lசௌதாம்ப்டன் : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். பிறகு பேட்டியளித்த வில்லியம்சன், தற்போது நிலவும் சௌதாம்ப்டன் வானிலைக்கு பௌலிங் செய்வதே சிறந்தது என்று கூறினார்.

அதேபோல், இந்திய கேப்டன் விராட் கோலியும், வில்லியம்சன் கூறியதை ஏற்றுக் கொண்டார். நாங்களும் டாஸ் வென்றிருந்தால், பௌலிங் தேர்வு செய்திருப்போம் என்று கூறியுள்ளார். இதில், முக்கிய அம்சம் என்னவெனில், இந்திய அணி தனது பிளேயிங் லெவனை மாற்றவில்லை.

இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா என்று பிளேயிங் லெவனில், இந்திய அணி எந்தவித மாற்றமும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள ரோகித், சுப்மன் கில் மிக நிதானமாக பேட்டிங் செய்தனர். பிட்ச் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்று சொன்னாலும், போல்ட், சவுதி, ஜேமிசன் ஆகியோரின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்தது. இது உண்மையில் ஆச்சர்யமான விஷயம் தான்.

அதேசமயம், ரோகித்திடமும் சரி, கில்லிடமும் சரி அவசரம் இல்லை. துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நேர்த்தியாக விளையாடினர். அவர் நிதானமாக விளையாடி 34 ரன்களை எடுத்து அவுட்டானார். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், 10.3வது ஓவரில் இருந்து, 14.3வது ஓவர் வரை இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்கவில்லை. சரியாக 25 பந்துகள். ரோகித்தும், கில்லும் அசரவில்லை. 10.3வது ஓவரில் 41 என்றிருந்த ஸ்கோர், 14.3 வரை 41 என்றே மெயின்டெய்ன் செய்யப்பட்டது.

புஜாரா நிதானமாக ஆடி நம்பிக்கையை கொடுத்தார். ஆயினும் அவரால் 8 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. கேப்டன் விராத் கோலி மற்றும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே சிறப்பாக ஆடி வருகின்றனர். 55 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்களை எடுத்திருந்தது. இவர்கள் இருவரும் இந்திய அணியின் வெற்றிக்காக போராடி வருகின்றனர்.

Read next: ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம்