இந்திய கிரிக்கெட் தலைவர் விராத் கோலியும் அவுஸ்திரேலியாவின் எலிஸ் பிரிட்டியும் ஐசீசீயின் உயர் கௌரவங்களை பெறுகின்றனர்.

3 months

ஆண்களுக்கான இரண்டு பிரிவு கௌரவங்களை இந்திய கிரிக்கெட்டின் தலைவர் விராத் கோலியும் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் சகலத்துறை ஆட்டவீராங்கனை எலிய்ஸ் பெர்ரியும் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

கடந்த பத்து வருடங்களில் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

30 வதுயடை பெர்ரி சிறந்த ஒருநாள் இருபதுக்கு இருபது மற்றும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விருதை பெறுவதை மிகப்பெரிய கௌரவமாக கருதுவதாக விராத் கோலி குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணம் மற்றும் 2013 சாம்பியன்ஸ் கி;ண்ணம் ஆகிய போட்டிகளில் கோலி கலந்துக்கொண்டு வெற்றிபெற்றிருந்தார்.

கடந்த பத்து வருடங்களாக சந்தித்த அனைத்து போராட்டங்கள் குறித்து மகிழ்ச்சி அடைவதாக கோலி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன்.      அதேபோன்று தரமான பந்துவீச்சார்ளகளுடன் இன்றும் எனது ஆட்டத்தை தொடர்கிறேன் என கோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த ஒன்றுக்காக போராடுவதை தான் பெருமிதம் அடைவதாகவும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் எவ்வாறு சிறந்த திறமையை வெளிப்படுத்துவது என்பதை தன்னை தானே சோதித்து பார்த்துள்ளதாகவும் கோல் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் ரி20 போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் தி அவார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2011 முதல் ஒக்டோபர் 2020 வரையான காலப்பகுதியில் கிரிக்கெட்டில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய வீரர்கள் நடுவர் குழாத்தினால் பெயரிடப்படுவார்கள்.இந்த நிலையில் வெற்றியாளர்கள் இரசிகர்கள் மற்றும் நிபுணர்களால் வாக்குகளினால் தெரிவு செய்யப்படுவார்கள்.

10 ஆண்டுகளின்  சிறந்த கிரிக்கெட் வீரர்  :  விராத் கோலி (இந்தியா)

தசாப்தத்தின் கிரிக்கெட்; வீராங்கனை : எல்ஸி பெர்ரி(அவுஸ்திரேலியா)

தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் : விராத் கோலி

தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை : எல்ஸி பெர்ரி

தசாப்தத்தின் இணை கிரிக்கெட் வீரர் கெய்ல் கொய்ட்ஸர் (ஸ்கொட்லாந்து)

தசாப்தத்தின் இணை கிரிக்கெட் வீராங்கனை : கெத்ரின் ப்ரைய்ஸ் (ஸ்கொட்லாந்து)

தசாப்தத்தின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது மகேந்திர சிங் தோனி

Read next: நூற்றாண்டின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ