பசுக்களுக்கு சிறுநீர் கழிக்கும் பயிற்சி

Sep 14, 2021 05:24 pm

பசுக்களுக்கு சிறுநீர் கழிப்பதற்கு முறையாக பயிற்சி அளித்தால் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும் என ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜேர்மனியின் டம்மர்ஸ்டொபில் விலங்கு உயிரியல் நிறுவனத்தின் பண்ணையில் 16 பசுக்களை கொண்டு வந்து அவற்றை குறிப்பிட்ட ஒரு இடத்தில் சிறுநீர் கழிப்பதற்கு பழக்கப்படுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

சிறுநீர்  கழிக்க வைக்கும் குறித்த இடம் மூலூ (MooLoo)என்று அழைக்கப்படுகின்றது.

இதன்போது அவற்றின் சிறுநீர் சேகரிக்கப்பட்டதுடன் அவை பரிசோதனைக்கும் உட்பட்டுள்ளது.இது மண்ணில் சேரும் போது நைட்ரஸ் ஒக்ஸைட்டை(nitrous oxide) உருவாக்குகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் மனித செயற்பாடுகளினால் வெளியேறும் பச்சை வீட்டு வாயுவில் 10 வீதமானவை கால்நடைகளினால் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read next: பிரித்தானியாவில் கோவிட் பாதிப்பின் இன்றய நிலவரம்