கொரோனா தொற்று, மருந்து மற்றும் அது தொடர்பாக இன்று அறிந்து கொள்ள வேண்டியவை

3 months

பெரும்பாலானா அமெரிக்கர்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தை2021 ஜுலை மாதம் அளவில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பல மாதங்களாக முன்னெடுக்கப்படும் என்றும் அமெரிக்க உயர் மட்ட சுகாதார அதிகாரி ஒருவர் செனற்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு மருந்து ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட பரிசோதனையில் ஜோன்ஸன் என்ட் ஜோன்ஸன் 60000 பேரை நேற்று இணைத்துக்கொண்டு மருத்துவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

ஐரோப்பா

கொரொனா வைரஸ் நிலைமை மோசமாக உள்ள பகுதிகளை வண்ணங்களால் குறியிட்டு காட்டும் வரைப்படத்தை வெளியிட பிரான்ஸ் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.குறிப்பாக பெரிசில் கட்டுப்பாடுகளை பலப்படுத்வதற்கு இது வழிவகுக்கும்.

சுவிட்ஸர்லாந்தில் முன்னணி விருந்தோம்பல் முகாமைத்துவ கல்லூரியில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து பட்டப்படிப்பு பிரிவு முழுவதையும் தனிமைப்படுத்தியுள்ளது.

பல நாடுகளில் இரண்டாம் அலை உருவாகும் ஆபத்து உள்ளநிலையில் ஐரோப்பாவின் 11 நாடுகளை ஜேர்மனி கொரோனா வைரஸ் அபாய வலய பட்டியலில் சேர்த்துள்ளது.இது சுற்றுலாத்துறையை பெரிதும் பாதிக்கும்.

ஆசிய - பசுபிக்

தாமதமாக டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் ஜப்பானியர்கள் அல்லாதவர்கள் கொவிட் 19 மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

புதன்கிழமை அன்று இந்தோனேஷியாவில் 4465 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதுவே அதிகூடிய நாளாந்த தொற்றாக பதிவாகின்றது.

மெல்பர்னில் இரண்டு வார சராசரி புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆக வீழ்ச்சி கண்டுள்ள நிலையில அவுஸ்திரேலியாவில் அதிக தொற்று பதிவாகும் விக்டோரியாவில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா

ப்ரூக்லின்மற்றும் குயின்ஸில் கொரோனா தொற்றை குறைப்பதற்காக அதிகளவான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நியூயோர்க் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றிலிருந்து மீள்வதற்காக நாடுகளுக்கு உதவி புரியும் வகையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக கனடாவின் லிபரல் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.இதேவேளை இது சிக்கனத்துக்கான நேரமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகூடிய நாளாந்த தொற்றாளர்கள் 1083 ஆக பதிவாகியுள்ளனர்.தொற்று ஆரம்பித்ததில் இருந்து அடையாளம் காணப்பட்ட அதிகூடிய தொற்று இதுவாகும்.

சீனாவின் பீ.ஜீ குழுமத்தினால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தொழிற்சாலையிலிருந்து 1.5 மில்லியன் மருத்துவ பரிசோதனை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு எதியோப்பியா இணங்கியுள்ளது.

மருத்துவ முன்னேற்றங்கள்.

ரு தடுப்பு மருந்து ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட பரிசோதனையில் ஜோன்ஸன் என்ட் ஜோன்ஸன் 60000 பேரை நேற்று இணைத்துக்கொண்டு மருத்துவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.இதன் செயற்றிறன் நிரூபிக்கப்பட்டால் இரண்டு டோஸ்கள் தேவைப்படும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது மில்லியன் கணக்காக டோஸ்கள் விநியோகிப்பதை இதன் மூலம் எளிதாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தடுப்பு மருந்தின் செயற்றிறனை சோதிப்பதற்காக தொற்றை சுயமாக ஏற்படுத்திக்கொண்ட தன்னார்வளர்களிடத்தில் பிரித்தானியா பரிசோதனையை நடத்த உள்ளதாக பினான்ஸல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தனது தடுப்பு மருந்து அளவு குறித்து அமெரிக்க தடுப்பு மருந்து தயாரிப்பாளரான நொவவெக்ஸ் உடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பிரஸல்ஸ் தயாராக உள்ளது.

கொவிட் தடுப்பூசிகளின் செயற்றிறனையும் பாதுகாப்பையும் சபை  கண்காணிக்கும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக சபை குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில் அங்கீகார செயற்பாட்டில் ட்ரம்ப் நிர்வாகத்தின் பங்கு இங்கு குறைத்து மதிப்பிடப்படுகின்றது.

பொருளாதார பாதிப்பு

கொரோனா பாதிப்பானது பங்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் டொலர் பெறுமுதியை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான புதிய விதிகள் பொருளாதார மீட்சியை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

சேவை கைத்தொழிலை தொழிற்சாலைகள் ஆரம்பித்தமையினால் அமெரிக்க வர்த்தக செயற்பாடுகள் சுமூகமாக காணப்பட்டுள்ளது.

Read next: தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொலை செய்து எரித்த வட கொரிய அதிகாரிகள்