சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலவரம்

1 week

இந்தத் தரவுகள் வார இறுதியில் வெளியிடப்படாத தரவுகளையும் உள்ளடக்கி உள்ளது. புதிய தரவுகள் கடந்த இரண்டு நாட்கள் பெறப்பட்ட தரவுகளையும் உள்ளடக்கும்.

16 நவம்பர் 2020 வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் புதிதாக 12839 தொற்றுகள் பதவியாகி உள்ளது. 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இந்தத் தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 269 974 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் நாட்டில் மொத்தம் 89 571 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது- ஒரு நாள் சராசரி 6,397.92 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேலும்483 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். 24 பெப்ரவரி 2020 இல் இருந்து 10 448 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

இறப்புகளை பொறுத்தவரை புதிதாக 198 பேர் கொரோனா தாக்கிப் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 பெப்ரவரி 2020 க்கு  பின்னர் இதுவரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 3158 பேர் இதுவரை பலியாகி உள்ளார்கள்.

தனிமைப்படுதலை பொறுத்தவரை 16 நவம்பர் 41 692 பேர் கொரோனா தொற்றின் பின்னர் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். 43 494 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அதேவேளை 1195  பேர் அதிக கொரோனா தொற்றுகள் உள்ள நாடுகளிலிருந்து பயணம் செய்த காரணத்தால் தனிமை படுத்தலில் உள்ளார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் 59784 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  24 ஜனவரி 2020 பின்னர் மொத்தம் 2 411 237 கொரோனா சோதனைகள் சுவிற்சர்லாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read next: மொடர்னாவின் கொரோனா தடுப்பு மருந்தின் நியம நேர மீளாய்வை ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றியம்.