நெதர்லாந்தில் கோவிட் தொற்றின் பாதிப்பு எவ்வாறு உள்ளது? முழு விபரம் உள்ளே

3 weeks

நெதர்லாந்தில் இன்று கோவிட் தொற்று எப்படி உள்ளது என்பதை கீழே உள்ள தரவுகள் விபரிக்கின்றனது.

கடந்த 24 (20 மார்ச் 2021 தரவுகள்) மணி நேரத்தில் புதிதாக 7,668 (நேற்றைவிட 280 அதிகம் )  தொற்றுக்களை நெதர்லாந்து பதிவு செய்துள்ளது, இதன் காரணமாக மொத்தத்தொற்றுக்களின் எண்ணிக்கை 1,211,215 என்று ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றது.

தற்பொழுது1,445 பேர் கோவிட் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ( நேற்றைவிட 17 அதிகம்), இதில் அவசர சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளடக்கவில்லை. அவரச சிகிச்சையைப் பெறுவோரின் எண்ணிக்கை 602 ஆக உள்ளது. இது நேற்றைவிட 23 அதிகமாகும். தற்பொழுது ஒவ்வொருநாளும்  40 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்பொழுது நோயைப் பரப்பும் நிலையில் 105,812 பேர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் மற்றவருக்கு நோயைப் பரப்புப்பும் அளவானது தற்பொழுது1.13 ஆக உள்ளது ( மார்ச் 2021 வெளியான தகவல்).

தர்லாந்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16,260 என்று அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றது, இது கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய 18 கோவிட் இறப்புகளையும் உள்ளடக்குகின்றது. ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி நெதர்லாந்தில் 16,395 பேர் இதுவரை கோவிட் தொற்றின் காரணமாக இறந்துள்ளார்.

தடுப்பு மருந்தை பொறுத்தவரை நெதர்லாந்தில் இதுவரை 2,040,932 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை 76 சதவிகிதம் பேர் நெதர்லாந்தில் கோவிட் தடுப்பு மருந்து பெற விருப்பம் கொண்டுள்ளனர்.

Read next: இனவெறி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜோ பைடன் தீர்மானம்