ஜெர்மனியில் கோவிட்-19 தொற்றின் தற்போதைய நிலவரம்

2 weeks

ஜெர்மனியில் நள்ளிரவு 12 மணிக்கு (1.04.2021) வெளியான தகவலின்படி புதிதாக +24.300 தொற்றுகள் பதிவாகி உள்ளது. இந்தப் புதிய தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை ஜெர்மனியில் 2,447,068 ஆக உள்ளது. ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின் படி 2.833.173 பேர் தொற்றுக்குள்ளானதாக அறியவருகிறது.

இதே சமயம் தொற்றிலிருந்து 2.535.000 பேர் மீண்டுள்ளார்ள், 221,600 பேர் தொற்றுக்குள்ளான நிலையில் உள்ளார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர்

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவர்கள் தற்பொழுது, 3.729 ஆக உள்ளது. புதிதாக +49 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 2,073 பேர் சுவாசக்கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இறப்புகள்

நேற்று ஜெர்மனி புதிதாக +201 இறப்புகளை பதிவு செய்துள்ளது, இதன் காரணமாக மொத்த இறப்புகளின்  தொகை 76.543 ஆக உயர்ந்தது. ஜோன் ஹாப்கின்ஸ் பலக்லைக்கழக தகவலின் படி மொத்தம் 76,823 பேர் பலியானதாகத் தெரிவிக்கின்றது.

R-ரேட்-ஒருவர் மற்றவருக்குக் கோவிட் நோயைப் பரப்புக்கும் எண்ணிக்கையானது 7 நாள் மதிப்பு 0.99 ஆகவும் 4 மதிப்பு 0.83 ஆகவும் உள்ளது.

R-ரேட் 1 க்கும் குறைவாக இருக்கும்பொழுது தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கருதப்படுகிறது

Read next: ஆறு மாதத்துக்கு பின்னர் அதிக கோவிட் தொற்றுக்களை பதிவு செய்த இந்தியா