பிரான்சில் தொற்றுகள் சடுதியாக குறைந்தது; மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் அதிகரிப்பு

1 week

பிரான்ஸ் சுகாதார அமைச்சு அறிவித்த தகவலின் படி அங்கு 5 ஏப்ரல் 2021 தரவுகள் படி புதிதாக 10 793 தொற்றுகள் பதிவாகிய காரணத்தால் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4 833 263ஆக உயர்ந்துள்ளதுபிரான்ஸ் உலக  தொற்றுகளின் அடிப்படையில் தரவரியையில் ஐந்தாவது இடத்தில் உள்ளதுவிடுமுறை நாட்கள் என்பதால் முழு தரவுகளும் கிடைக்கப்படாததால் குறைவான தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கலாம்.

கோவிட் தொற்றின் பாதிப்பின் காரணமாக புதிதாக மேலும் +551 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்- இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 907 ஆக தற்பொழுது உள்ளது. அவர்களில் 5,433 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்கள்இன்று மட்டும் 92 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

2020 வசந்த கால பகுதியில் மிக அதிகப்படியாக 7,148 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்; ஆனால் இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாத பகுதியில் சில நூறுகளாக இருந்தது.

பிரான்சில் கோவிட் தாக்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96 847 ஆக உள்ளது-இது புதிதாக உயிரிழந்த +197 பேரையும் உள்ளடக்கும்.

பிரான்சில் இதுவரை 9,251,321  பேருக்கு முதல் தடுப்பு மருந்தும் 3,091,225 பேருக்கு இரண்டு தடுப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த சனத்தொகையில் 13.81 % பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 4.61 % விகிதம் பேர் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர். நாட்டின் சனத்தொகையில் 46.19 % சனத்தொகைக்கு தடுப்பு மருந்தை கொடுத்தால் 60 தடுப்பு மருந்து விகிதத்தை பெறமுடியும். 60 விகித தடுப்பூசியை கொடுத்தாலும் 60 விகித நோய் தடுப்பை பெறமுடியும் என்று பொருளப்பட முடியாது.

Read next: திருவான்மியூர் வாக்குச்சாவடியில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த நடிகர் அஜித்!