ஜெர்மனியில் கோவிட் நிலைமை மோசமடைந்து வருகிறது; தொற்றுகள் 23648 ஆல் அதிகரிப்பு

Nov 21, 2020 01:25 pm


ஜெர்மனியில் நள்ளிரவு 12 மணிக்கு (20.11.2020) வெளியான தகவலின்படி புதிதாக +23,648 தொற்றுகள் பதிவாகி உள்ளது. இந்தப் புதிய தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை ஜெர்மனியில் 879,564 ஆக உள்ளது.

இதே சமயம் தொற்றிலிருந்து 579,100 பேர் மீண்டுள்ளார்கள், 286,800பேர் இதுவரை தொற்றிலிருந்து மீளவில்லை. தேசிய அளவில் கடந்த 7 நாள் தரவுகளில் ஒவ்வொரு 100,000 மக்கள் தொகையிலும் 139 பேருக்குத் தொற்றுகள் பதிவாகி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒவ்வொரு 100,000 சனத்தொகையில் 107 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் மாவட்டங்களில் ஏழு நாள் நாள் நிகழ்வு என்று கூறப்படும் மொத்த சனத்தொகையில் உள்ள ஒவ்வொரு 100,000 பேரிலும் 50 மேற்பட்ட தொற்று 373 மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. 100,000 பேரில் 100 தொற்றுகளுக்கு மேலாக 267 மாவட்டங்களில் உள்ளது. 18 மாவட்டங்களில் 100,000 பேரில் 250 மேல் தொற்றுகள் பதிவாகி உள்ளது.

பவேரியா, பெர்லின், ப்ரெமன், ஹெஸ்ஸி, நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் சாக்சோனி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து தேசிய அளவில் உள்ள சராசரியை விடத் தொற்றுகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர்

அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 15 இல் 655 ஆக இருந்த எண்ணிக்கை நவம்பர் 20 திகதி 3615 ஆக உயர்ந்துள்ளது.

ஜெர்மனியில் மொத்தம் 28,173 தீவிர சிகிச்சை படுக்கைகள் உளளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில்  22,066 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது, 6,107 படுக்கைகள் மீதம் உள்ளது.

 தற்பொழுது கொரோனா தொற்றின் காரணமாகத் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கையான 3615 இல் 2,103 பேர் (57%) சுவாசக்கருவி பொருத்தப்பட்ட படுகைகளில் உள்ளார்கள்.

இறப்புகள்

நேற்று ஜெர்மனி புதிதாக  260 இறப்புகளை பதிவு செய்துள்ளது, இதன் காரணமாக மொத்த இறப்புகளின்  தொகை13,630 ஆக உயர்ந்தது.

R-ரேட்-ஒருவர் மற்றவருக்குக் கோவிட் நோயைப் பரப்புக்கும் எண்ணிக்கையானது 7 நாள் மதிப்பு 1.05 ஆகவும் 4 மதிப்பு 0.98 ஆகவும் உள்ளது.

Read next: ஜனவரி அளவில் இந்தியாவினால் அஸ்ரஸெனெககாவை பெற்றுக்கொள்ள முடியும் - உள்ளுர் தயாரிப்பாளர்கள் தெரிவிப்பு