இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்றுகள்

1 week

இந்தியாவில் சில நாட்களாக குறைந்து வந்த தொற்றுகள் மீண்டும் அதிகரித்துள்ளது இன்று. அரசு வெளியிட தகவலின் படி இன்று வியாழன் 45,576  தொற்றுகளும் 585 இறப்புகளும் பதிவாகி உள்ளது. இந்த புதிய இறப்புகளையும் சேர்த்து மொத்த இறப்புகள் 1,31,578 ஆக உயர்ந்துள்ளது அதேவேளை தொற்றுகளின்  மொத்தம் 89,58,484 ஆக உயர்ந்தது, அவற்றில் 8383602 பேர் நோயில் இருந்து  மீண்டுள்ளார்கள் மேலும் 443,303 பேர் இதுவரை நோயில் இருந்து மீளவில்லை.

தமிழ் நாட்டை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 1,707 தொற்றுகள் பதவியாகியது, மொத்த தொற்றுகள் 7,64,989 ஆக உள்ளதுமேலும் 19 பேர் பலியாகியதால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 11,550 ஆக உயர்ந்தது; 2,251 பேர் மருதவுவமனையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.கொரோனாவில் இருந்து மீளாதவர்கள் 13907 ஆக உள்ளது.

Read next: பிரான்சில் தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது