கொரோனா தடுப்பூசி போட்டு இந்த நிலையா? பிரித்தானியாவிலிருந்து வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை

Sep 13, 2021 04:56 pm

ஆறு மாதங்களில் பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 700 மக்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை மட்டும் இதுவரை வெளியான நிலையில், தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 2ம் திகதி மற்றும் ஜூலை 2ம் திகதிக்கும் இடையில் கொரோனா தொற்றால் இறந்த 51,281 பேர்களில், 38,964 பேர் தடுப்பூசி போடப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

தடுப்பூசி அளிக்கப்பட்டு வந்த ஆரம்ப கட்டங்களை உள்ளடக்கிய காலத்தில், 640 பேர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். 

இது 2021ல் முதல் 6 மாதங்களில் ஏற்பட்ட கொரோனா இறப்பில் 1.25% என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு சுமார் இரண்டு வாரங்களுக்கு பிறகு 256 பேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டவர்களும் அதில் அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனா தடுப்பூசிகளால் இறப்பு எண்ணிக்கையானது பல மடங்கு குறைந்துள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முக்கிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read next: சீன நகர் ஒன்றில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகள்