பிரித்தானியவில் கோவிட் தொற்றுகள் குறைந்தாலும் இறப்புகள் அதிகமாகவே உள்ளது

1 month

இன்று 26 நவம்பர் 2020 பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவலின் படி புதிதாக 498 இறப்புகள் பதிவாகி உள்ளது.  இதன் காரணமாக இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 57,031 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளை 66,713 (நவம்பர் 13 ஆம் திகதி பதிவுசெய்த தகவல்) மரணச் சான்றிதழிகளில் அவர்கள் கோவிட்-19 தொற்றுக்குள்ளானதாக அறிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 2,838 பேரின் இறப்புச் சான்றிதழ்களில் அவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்தார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இன்று 17,555 புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளது, இந்தத் தொற்றுகளையும் சேர்த்து இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,538,794 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக1434 (21 நவம்பர்) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். தற்பொழுது (24 நவம்பர் 2020) மொத்தம் 16,341 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 209,918 பேர் பிரித்தானியாவில் கொரோனா ஆரம்பித்தத்திலிருந்து தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நவம்பர் 25 ஆம் திகதி மொத்தம் 1,480 பேர் சுவகக்கருவி உதவியுடன் சுவாசிக்கும் சூழலில் இருந்ததாக அரசின் அறிக்கை தெரிவிக்கின்றது.

Read next: பெரும்பாலும் அனைத்து இங்கிலாந்து மக்களும் கடுமையான வைரஸ் விதிமுறைகளை எதிர்கொள்ளக்கூடும்.