நெதெர்லாந்தில் தொடர்ந்து கோவிட் தாக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது

Apr 18, 2021 09:44 am

கடந்த 24 (17.04.2021 தரவுகள்) மணி நேரத்தில் புதிதாக 8,336 தொற்றுக்களை நெதர்லாந்து பதிவு செய்துள்ளது, இதன் காரணமாக மொத்தத்தொற்றுக்களின் எண்ணிக்கை 1,419,871 என்று ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றது.

நடந்த 24 மணி நேரத்தில் 215 பேர் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 1,626 பேர் கோவிட் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், இதில் அவசர சிகிச்சை பெற்று வருபவர்களை உள்ளடக்கவில்லை. அவரச சிகிச்சையைப் பெறுவோரின் எண்ணிக்கை 802 ஆக உள்ளது, இது நேற்றை விட 10 அதிகமாகும். தினமும் 53 பேர் சராசரியாக தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்பொழுது நோயைப் பரப்பும் நிலையில் 161,823 பேர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் மற்றவருக்கு நோயைப் பரப்புப்பும் அளவானது தற்பொழுது 1 ஆக உள்ளது.  ஆர் ரேட் 1 க்கு குறையாமல் இருப்பதால் கோவிட் நெதெர்லாந்தில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்று பொருற்படலாம். இது தபொழுது அதிகரித்துள்ள தொற்றுகள் எண்ணிக்கையை வைத்துக் கணிக்கக்கூடியதாக இருக்கிறது.

நெதர்லாந்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16,904 என்று அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றது, இது கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய 31 கோவிட் இறப்புகளையும் உள்ளடக்குகின்றது.  

Read next: வேப்பனப்பள்ளி பகுதிகளில் யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கவலை.