இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் பூஸ்டர் டோஸ்

Sep 14, 2021 03:35 pm

இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் கொவிட் பூஸ்டர் செலுத்தப்பட உள்ளதாக சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 30 மில்லியன் மக்கள் மூன்றாவது டோஸை செலுத்திக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்றும் சுகாதார தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குழுவின் கண்கரிப்பகத்தின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாகவும் சபையில் சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்,இளம் வயதினர் மற்றும் சுகாதார முன்கள ஊழியர்களுக்கு முதலில் செலுத்தப்பட உள்ளது.

பைஸர் தடுப்பூசி இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன்,இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் பூஸ் செலுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேல்ஸில் பூஸ்டர் செலுத்துவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஸ்கொட்லாந்தும் வட அயர்லாந்தும் தத்தமது திட்டத்திற்கு ஏற்ப செயற்பட உள்ளன.

Read next: ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் படுகொலை!