பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இன்றய தரவுகள்

4 months

இன்று 24 அக்டோபர் 2020- பிரித்தானியாவில் இன்று மட்டும் மொத்தம் 340,132 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் அறியப்பட்டன20 ஏப்ரல் 2020 க்கும் 22 ஒக்டோபர் 2020 க்கும் இடையில் மொத்தம் 28,744,108 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பரிசோதனைகள் செய்துகொண்ட பலர் இந்தச் சோதனைகளை 1 முறைக்கும் மேலாகச் செய்து கொண்டுள்ளார்கள் (மாதிரிகள் நோயாளிகளிலிருந்து பெறப்படுவதும் மற்றும் அவை ஆவ்வுக்கு உட்படுத்தப்படுவது என்பவை வேறுபட்ட எண்ணிக்கையில் உள்ளது).

உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

இன்று மட்டும் 23,012 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாகப் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் 148,589 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தார்கள். அதற்கு முன்னதான  7 நாட்களுடன் ஒப்பிடும்பொழுது தற்பொழுது உள்ள தொற்றுகள் 29.7 விகித அதிகரிப்பு ஆகும். இதுவரை பிரித்தானியாவில் ஜனவரி 31 க்கும் ஒக்டோபர் 24 க்கும் இடையில் மொத்தம் 854,010 தொற்றுகள் பதிவாகி உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

இந்த மாதம் 20 திகதி  மருத்துவமனையில் 1,139  பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்அதே வேளையில் கடந்த 7 நாட்களில் மொத்தம் 7100 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்கள்அதற்கு முன்னர் உள்ள 7 நாட்களுடன் ஒப்பிடும்பொழுது இவை 31.5 விகிதத்தால் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும்.

ஒக்டோபர் 20 ஆம் திகதி 159,512 பேர் கொரோனா தொற்றை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சுவாசம் எடுப்பதற்கு உதவும் கருவியைப் பயன் படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். ஒக்டோபர் 23 ஆம் திகதி மொத்தம் 743 பேர் இவ்வாறு சுவாசக்கருவி உதவியுடன் சுவாசிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள்.

இறப்புகள்

கொரோனா தொற்றுக்குள்ளான பலர் பரிதமாக இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது

இன்று 24 ஆம் திகதி தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதித்து 174  பேர் பலியாகினர். கடந்த 7 நாட்களில் மொத்தம் 1,166 பேர் கொரோனா தாக்கிப் பலியாகி உள்ளார்கள். இது கடந்த 7 நாட்களுடன் ஒப்பிடும்பொழுது இறப்புகள் 42.4 விகித அதிகரிப்பு ஆகும்.

மார்ச் மாதம் 2 திகதிக்கும் ஒக்டோபர் 24 திகதிக்கும் இடையில் மொத்தம் 44,745 பேர் கொரோனா தாக்கிப் பலியாகியுள்ளார்கள்.

பிரித்தானியவில் ரேட் இன்று அழைக்கபடும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும்பொழுது அவர் மற்றவர்களுக்குப் பரப்பும் எண்ணிக்கையானது 1.2 க்கும் 1.4 க்கும் இடையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொரோனா பரவும் அளவு 3-6 விகிதமாக உள்ளது. பொதுவாக ரேட் 1 க்குள் இருக்கும்பொழுது நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கருதப்படுகிறது.

58,164 பேரின் மரணச் சான்றிதழ்களிளில் அவர்களுக்கு இறப்பதற்கு முன்னர் கொரோனா தொற்றி இருந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது.

Read next: இரண்டாவது அலையால் 250,000 கோவிட்-19 இறப்புகளை கடந்த இரண்டாவது பிராந்தியமாக ஐரோப்பா!