சுவிற்சர்லாந்தில் கோவிட்-19 பாதிப்பின் இன்றய நிலவரம்

1 week

ஏப்ரல் 7, 2021 அன்று அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 2301 தொற்றுகள் பதிவாகி  உள்ளது. 26 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இந்தத் தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 612 575 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் நாட்டில் மொத்தம் 23705 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது- ஒரு நாள் சராசரி 1,693 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேலும் 112 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். கடந்த 14 நாட்களில் 697 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

இறப்புகளை பொறுத்தவரை புதிதாக 21 பேர் கொரோனா தாக்கிப் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச தகவலின் படி கடந்த 25 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இதுவரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 9772 பேர் பலியாகி உள்ளார்கள்.

புதிதாக 33 742 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது25 ஜனவரி 2020 பின்னர் மொத்தம் 6260306 கொரோனா சோதனைகள் சுவிற்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

26 மார்ச் 2021 வெளியிட்ட தகவலின் படி ஒருவர் மற்றவருக்கு நோயை பரப்பும் ஆர் மதிப்பு 1,03 ஆக உள்ளது. இதனால் அங்கு கோவிட்-19  கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்று பொருள்ப்படலாம்.

ஏப்ரல் 4, 2021 வெளியான தகவலின் படி சுவிற்சர்லாந்தில் இதுவரை 1 604 838 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, இது 100 பேரில் 18.56 பேருக்கு மருந்து கொடுக்கப்பட்டதற்கு சமமானது ஆகும், முழுமையாக (இரண்டு தடுப்பு மருந்துகளும்) 604 312 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது.

Read next: மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவிப்பு.