கனடாவில் கோவிட்-19 தொற்றின் தற்போதைய நிலவரம்

1 week

மாலை 7 மணி, ஏப்ரல் 6, 2021 அன்று கனடிய அரசு வெளியிட்ட தரவுகளின் படி மேலும் 6,520 தொற்றுகள் பதிவாகி உள்ளது, இவற்றையும் சேர்த்து மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,020,893ஆக உயர்ந்துள்ளது.

தொற்றிலிருத்தி இதுவரை 937,453 பேர் மீண்டுள்ளார்கள்.

இறப்புகளைப் பொறுத்தவரை 23,141 பேர் இதுவரை இறந்துள்ளார்கள், இவர்களில் 23 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள் அல்லது புதிதாக இறந்தவர்கள் என்று அரச அறி க்கை தெரிவிக்கின்றதுகனடாவில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 2.377 விகிதம் பேர் பலியாகி உள்ளார்கள்.

கனடா புதிதாக 417,921 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது, இதுவரை மொத்தம் 28,364,201 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது.

கியூபெக் மற்றும் ஒன்ராறியோவில் கொரோனா வைரஸின் பாதிப்புகள் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இந்த மாகாணங்களில் மொத்த தொற்றுக்களை பொறுத்தவரை இவை முறையே 318,532 மற்றும் 367,602 ஆகவும் உள்ளது.

கடந்த 14 நாட்களில் ஒன்ராறியோவில் மிக அதிகமான தொற்றுகள் பதிவாகி வருகிறது. இது ஒன்ராறியோவில் 35,483 ஆகவும் கியூபெகில் 14,825 ஆகவும் பதிவாகி உள்ளது. இது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 12,735 ஆக உள்ளது.

அதே வேளை மொத்த இறப்புகள்  நேற்றைய தரவுகளின் படி ஒன்ராறியோவில் 7,458 ஆகவும் கியூபெக்கில் 10,701 ஆகவும் உள்ளது. கடந்த 14 நாட்களில் ஒன்ராறியோவில் 205  இறப்புக்களும் கியூபெக்கில் 83 இறப்புக்களும் பதிவாகியது.

கனடாவில் நேற்று சனிக்கிழமை வரை 6,758,617 கொரோனா தடுப்பு மருந்துகளைப் ஏற்றப்படுள்ளது, மொத்த சனத்தொகையில் 15.859% விகிதம் பேர் குறைந்தது முதலாவது தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளனர். அவர்களில் 6,027,659 ஒரு தடுப்பு மருந்தை மட்டும் பெற்றுள்ளனர் மேலும் 730,958 பேர் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர்.

Read next: பறிக்கப்பட்ட கிரீடம் மீண்டும் அவரிடமே சென்றது! இலங்கை அழகி போட்டியில் அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்கள்..